ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - நாளை, நாளை மறுநாள் நடக்கிறது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த சிறப்பு முகாம் நடக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - நாளை, நாளை மறுநாள் நடக்கிறது
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் 1,122 வாக்குச்சாவடி மையங்கள், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் செய்திட ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை), நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் மேற்கூறிய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி படிவங்கள் பெற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து, விடுபட்டு இருப்பின் பெயர் சேர்த்துக் கொள்ளவும், தவறான பதிவுகள் இருப்பின் திருத்தம் செய்து கொள்ளவும், இறந்தவர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் ஆகியோர் பெயர்கள் நீக்கம் செய்திடவும், சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள் மாற்றம் செய்து கொள்ளவும் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்மையில் எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படத்தை ஒட்டி இருப்பிட, வயது, ஆதார் அதற்கான அரசு மூலம் பெறப்பட்ட அடையாள ஆவணத்தின் நகல்களை வழங்கி இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள www.nvsp.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற முடியும். மேலும் ஆண்ட்ராய்டு செல்போன் மூலமாக voter helplineApp என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.

16.11.20-ந்தேதி முதல் 15.12.20-ந் தேதி வரை பெறப்பட்ட படிவங்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்த இறுதி வாக்காளர் பட்டியல் 20.1.2021 அன்று அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் நாள் அன்று வெளியிடப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com