சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 14 பேர் பலி-521 பேருக்கு தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 14 பேர் பலி-521 பேருக்கு தொற்று உறுதி
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

521 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 547 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சி பகுதியில் 318 பேர், ஓமலூரில் 33 பேர், சங்ககிரியில் 17 பேர், வீரபாண்டியில் 16 பேர், பனமரத்துப்பட்டியில் 15 பேர், வாழப்பாடியில் 14 பேர், சேலம் ஒன்றியம் பகுதியில் 14 பேர், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் 13 பேர், ஆத்தூரில் 12 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நங்கவள்ளியில் 11 பேர், கெங்கவல்லியில் 9 பேர், எடப்பாடி மற்றும் மேட்டூர் நகராட்சியில் தலா 8 பேர், மகுடஞ்சாவடியில் 6 பேர், தாரமங்கலத்தில் 5 பேர், மேச்சேரி மற்றும் காடையாம்பட்டியில் தலா 4 பேர், கொளத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், ஆத்தூர் நகராட்சியில் 2 பேர், நரசிங்கபுரம் நகராட்சி, பனமரத்துப்பட்டி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் என மொத்தம் 521 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 594 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 3 ஆயிரத்து 422 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

14 பேர் பலி

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி, 42 வயது பெண் மற்றும் 82 வயது முதியவர், 71 வயது முதியவர், 53 வயது ஆண், 62 வயது முதியவர் உள்பட மொத்தம் 14 பேர் ஒரேநாளில் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 534 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com