

மும்பை,
மும்பை செம்பூர் பகுதியில் உபயோகப்படுத்தப்படாத கன்டெய்னர் பெட்டியில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இதில் பிளாஸ்டிக் பையால் சுற்றிவைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் அழுகிய உடல் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் நேபாள நாட்டை சேர்ந்த துர்கா காட்கா(வயது52) என்பது தெரியவந்தது.
இதனால் போலீசார் அப்பெண்ணின் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். இதில் காவலாளியாக வேலை பார்த்து வரும் மான்சிங் (60) என்பவர் மற்றொரு நபருடன் சேர்ந்து பெண்ணை கொலை செய்து கன்டெய்னரில் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மான்சிங்கை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையில் தொடர்பில் இருந்த மற்றொருவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.