சிவகங்கை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டம் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டம் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
Published on

சிவகங்கை,

சிவகங்கை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, சிவகங்கையை அடுத்த கூத்தாண்டன் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார்.

விழாவில் கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் பயோ மெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து கூறியதாவது:- ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை பிற நபர்கள் வாங்கி செல்வதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. தற்போது இந்த திட்டம் சிவகங்கை தாலுகாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் கடைக்கு வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து உணவு பொருளைப் பெற்று செல்ல முடியும். அவ்வாறு கைரேகை பதிவாகாதபோது குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுடன் சென்று அந்த எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்.

இந்த முறை சிவகங்கை தாலுகாவில் உள்ள 119 ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 56 ஆயிரத்து 729 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கூட்டுறவு இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சரண்யா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com