சிவமொக்காவில் ஸ்கூட்டரில் சுற்றிய கொரோனா பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ சான்றிதழை பார்த்து போலீஸ் அதிகாரி அதிர்ச்சி

சிவமொக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஸ்கூட்டரில் சுற்றியுள்ளார். அவருடைய மருத்துவ சான்றிதழை பார்த்து போலீஸ் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
சிவமொக்காவில் ஸ்கூட்டரில் சுற்றிய கொரோனா பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ சான்றிதழை பார்த்து போலீஸ் அதிகாரி அதிர்ச்சி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுப்பட்டு இருந்தது. இந்த 57 மணி நேர ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து பொதுமக்கள் பொது வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் நடமாடியவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.

சிவமொக்கா நகரில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த இளைஞர் ஒருவரை மறித்து, ஊரடங்கின்போது எதற்காக இவ்வாறு ரோட்டில் சுற்றுகிறாய் என்று கேள்வி கேட்டார். உடனே அந்த இளைஞர் தன்னிடம் இருந்து மருத்துவ சான்றிதழை எடுத்து அந்த அதிகாரியிடம் கொடுத்தார். சார் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது, என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி, உடனே அந்த இளைஞரிடம் இருந்த சற்று தள்ளி நின்று பேசி, கொரோனா பாதிப்புடன் வெளியில் நடமாடலாமா?, வீட்டு தனிமையிலோ அல்லது மருத்துவமனையிலோ தானே இருக்க வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞர், சார் நான் தற்போது வீட்டுக்கு தான் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அந்த போலீஸ் அதிகாரி அந்த மருத்துவ சான்றிதழை கொடுத்து அனுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com