தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் நேற்று நீட்தேர்வு நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்
Published on

சென்னை,

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் நேற்று நீட்தேர்வு நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், அவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன அந்தவகையில் 90 முதல் 95 சதவீதம் பேர் தேர்வை எழுதி இருக்கின்றனர்.

சென்னையில் 33 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 922 பேர் தேர்வை எழுத இருந்தனர். இவர்களில் 800 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 17 ஆயிரத்து 122 பேர் தேர்வை எழுதியிருக்கின்றனர் அதன்படி சென்னையில் 96 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்வை சந்தித்து இருக்கின்றனர். நாடு முழுவதும் 202 நகரங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில், அவற்றில் பல நகரங்களில் 95 சதவீதம் முதல் 96 சதவீதம் வரையிலான மாணவர்கள் வருகை தந்து தேர்வை எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com