“தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
“தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Published on

கோவில்பட்டி,

பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து இறுதி முடிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து உள் ளது. எனவே, எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டுறவு சங்க தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்துக்குள் கூட்டுறவு சங்க மாநில நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளையே தெரிவிப்பார். தமிழகத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதியும் தந்து, பாதுகாப்பும் வழங்குகின்றனர்.

நாம் தமிழகத்தில் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது போன்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி மொழியை புகழ்ந்து பேசி உள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது. மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை அ.தி.மு.க. அரசு பெற்று தந்தது. மேலும் தமிழ் மொழியை பாதுகாக்கும் அரசாகவும் உள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு சிறப்பான வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com