தமிழகத்தில் பொதுவினியோகத்துறை, மின்சாரத்துறையை தனியார் மயமாக்க அ.தி.மு.க. அரசு முடிவு முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பொதுவினியோகத்துறையையும், மின்சாரத்துறையையும் தனியார் மயமாக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பொதுவினியோகத்துறை, மின்சாரத்துறையை தனியார் மயமாக்க அ.தி.மு.க. அரசு முடிவு முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு
Published on

கன்னிவாடி,

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர், அந்த தொகுதிக்குஉட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி, வீதியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார்.

அப்போது, பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கிறார். வாக்கு சேகரிக்க கிராமங்களுக்கு செல்லும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரசாரத்தின்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்டு, மணல் வினியோகம் செய்யப்படும்.

தருமத்துப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் இல்லை என்றும், இங்குள்ள ஊராட்சி தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினர். அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினை தி.மு.க. ஆட்சி அமைந்த 15 நாட்களுக்குள் தீர்க்கப்படும். காலனி பகுதியில் மருத்துவமனை அமைக்கப்படும்.

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மினி லேப்டாப் வழங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. நிச்சயமாக வழங்குவோம். கியாஸ் சிலிண்டர் விலையைக் குறைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பொதுவினியோகத்துறை மற்றும் மின்சாரத்துறையை அ.தி.மு.க. அரசு தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பும், சீனி ஒரு கிலோவும் அதிகமாக கொடுக்க ஏற்பாடு செய்து தருவோம். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசும் முடிவு செய்திருக்கிறார்கள். இலவச மின்சாரம் இல்லையென்றால் விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாது. தி.மு.க. இலவச மின்சாரத்தை ரத்து செய்யாது. எப்போதும் போல் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வந்து கொண்டிருக்கும். ரேஷன் கடையும் தனியார் மயம் ஆகாது. அரசிடம் இருக்கும்பொழுதே ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள். தனியாருக்கு சென்றால் எந்த பொருளும் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்து தி.மு.க.விற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

கூப்பிட்ட குரலுக்கு உங்கள் ஊருக்கு ஓடி வருவேன். இவ்வாறு கூறினார். தொடர்ந்து தர்மத்துப்பட்டி, செவன கரையான் பட்டி, பழனி யூர், சுரைக்காய்பட்டி, குயவன் நாயக்கன்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சிவகுரு சாமி, ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், வக்கீல் மூர்த்தி, ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, முருகன், காங்கிரஸ் முருகானந்தம், ஐஏஎஸ் கருப்பையா, புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருணாச்சலம், தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன், கரிசல் ஜோசப், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, கரிசல்பட்டி ஜஸ்டின், கசவனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் தொகுதி வேட்பாளர் இ.பெரியசாமி தர்மத்துப்பட்டியில் திறந்த வேனில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com