தமிழகத்தில் இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றர்

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றர் என்று அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றர்
Published on

ஆம்பூர்,

ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதியில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள 120 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். ஹஜ் பயணம் செல்பவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆம்பூரில் நடந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்கும் என்றார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் பேசுகையில், ஹஜ் பயணம் செல்பவர்களுக்கான மானியத்தை தற்போது மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால் தமிழக அரசின் சார்பில் மானியம் வழங்க வேண்டும் என அமைச்சர் நிலோபர் கபில் மூலம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதில் வக்பு போர்டு உறுப்பினர் அட்டியா, அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.மதியழகன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஹபிபூர்ரஹ்மான், ஷபீக் ஷமீல் சமூக சேவை தலைவர் பிர்தோஸ் கே.அஹமத், ஆம்பூர் ஜமாத் தலைவர் கதீப் ஷஹாபுத்தின், உதவித்தலைவர் மத்தேக்கார் அஷ்பாக்அஹமத், சின்னமசூதி இமாம் குல்சார்அஹமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com