தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 146 பேர் வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 146 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 146 பேர் வேட்புமனு தாக்கல்
Published on

தென்காசி:

தென்காசி தொகுதியில் நேற்று செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பெயரில் மேலும் ஒரு மனுவும், அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக சங்கரபாண்டியன் ஒரு மனுவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் முகம்மது மீண்டும் ஒரு மனுவும் தாக்கல் செய்தனர். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாற்று வேட்பாளராக முருகையா பாண்டியன் மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் வின்சென்ட் ராஜ் மீண்டும் மனுதாக்கல் செய்தார். அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சுரேஷ்குமார், அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பில் ஜெகநாதன், பனங்காட்டு படை கட்சி சார்பில் செல்லகனி மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.

சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. சார்பில் ராஜா மேலும் ஒரு மனுவும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜா சிங், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேந்திர குமார், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் சுயச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வாசுதேவநல்லூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார். மை இந்தியா கட்சி சார்பில் கருப்பசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சின்னச்சாமி, தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ஜெயக்குமார் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடையநல்லூர் தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ண முரளி பெயரில் மேலும் 3 மனுக்கள் தாக்கல் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அம்பிகா தேவி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அல்லிராணி மற்றும் சுயேச்சைகள் மனுதாக்கல் செய்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முகம்மது அபுபக்கர் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார்.

ஆலங்குளம் தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பில் மாரியப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் செல்வகுமார் மற்று சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் நேற்று ஒரே நாளில் 80 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர். இறுதியாக மாவட்டத்தில் மொத்தம் 146 பேர் 158 மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஆகும. அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com