அன்னவாசல் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

அன்னவாசல் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அன்னவாசல் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு
Published on

அன்னவாசல்,

விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் நேற்று அன்னவாசல் தெற்கு ஒன்றியம் உப்புப்பாறை, மேலப்பாறைகளம், குடுமியான்மலை, உருகம்பட்டி, அரியமுத்துப்பட்டி, மரிங்கிப்பட்டி, கீழப்பாறைகளம், ஓச்சப்பட்டி, அண்ணாநகர், விசலூர், எழுவிச்சிப்பட்டி, தச்சம்பட்டி, கிளிக்குடி, சொக்கம்பட்டி, சீத்தப்பட்டி, சோலைசேரிப்பட்டி, மாம்பட்டி, வேப்பங்கனிப்பட்டி, வலையப்பட்டி, கவினாரிப்பட்டி, விளாப்பட்டி, விலாவயல், வைரம்பட்டி, பேயால், செட்டியாப்பட்டி, பெருமாள்பட்டி, எல்லைப்பட்டி, கூடலூர், பரம்பூர், ஆணைப்பட்டி, பின்னங்குடி, சீகம்பட்டி, குளவாய்ப்பட்டி, காட்டுப்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை என பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இது போன்ற மகத்தான திட்டங்களை செயல்படுத்த எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்யவேண்டும் என்றார்.

இதேபோல் தி.மு.க.வேட்பாளர் பழனியப்பனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசும்போது, விவசாயிகளை மத்திய அரசு பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்காது. ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு அது இனி கிடைக்காது.

நாடாளுமன்றத்தில் மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் ஏழைகளுக்கு நல்லது இனிமேல் நடக்காது. வேளாண் சட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு ஆதரவு அளித்து வருகிறது. எனவே இந்த அரசை விரட்ட நீங்கள் படித்த, நல்ல மனம் படைத்த வேட்பாளரான பழனியப்பனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com