

அடையாறு,
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் ஆசாமிகள் செல்போன்களை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார், செல்போன் பறிப்பு சம்பவம் நடந்த ஒரு இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.