குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தி.மு.க.வினர் மனு

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தி.மு.க.வினர் ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் மனு அளித்தனர்.
குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தி.மு.க.வினர் மனு
Published on

குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

இதில் குளித்தலை ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் அ.தி.மு.க.வினர் 6 இடங்களிலும், தி.மு.க.வினர் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்தநிலையில் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டு பெட்டியை திறக்கும்போது தங்களையோ, தங்கள் முகவர்களையோ அதிகாரிகள் அழைத்து திறக்கவில்லை. வாக்குகளை பிரித்தல், வாக்கு எண்ணும் இடங்களில் ஆளும் கட்சியினர் புகுந்து எங்களது முகவர்களை செயல்படமுடியாமல் தடுத்து வாக்குகளை மாற்றம் செய்து கணக்கீடு செய்துள்ளனர்.

பல்வேறு முறைகேடுகள் செய்து நாங்கள் தோல்வியடைந்ததாகக்கூறி அடியாட்களை வைத்து எங்களை மிரட்டி வெறியேற்றிவிட்டனர். ஆகவே வாக்கு எண்ணிக்கை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதால், உடனடியாக மறுவாக்கு எண்ணிக்கை செய்யவேண்டுமென குளித்தலை ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெரியசாமி, நித்யா, பாலசுப்பிரமணியன், சுகந்தி ஆகிய 4 பேரும் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com