30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர், கடந்த 30 ஆண்டுகளாக கொடும் பாம்பு விஷத்தைத் தனது உடலில் ஏற்றி வருகிறார்.
30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!
Published on

லிபோர்னியாவில் வசிக்கும் ஸ்டீவ் லுட்வின் என்ற அந்த 51 வயது நபர், மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தை தயாரிப்பதற்காக இவ்வாறு பாம்பின் விஷத்தை தனது உடலில் செலுத்தி வருவதாகக் கூறுகிறார்.

இதற்கு உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளின் விஷம் அவருக்கு தேவைப்படுகிறது. பாம்புகளிடம் இருந்து விஷத்தை எடுத்து, பின்னர் அதனை தனது உடலில் ஏற்றிக்கொள்கிறார்.

போப் புல்விரியன் என்ற வகை பாம்பிடம் விஷம் எடுப்பது போன்றுதான் பிற பாம்புகளிடம் இருந்தும் ஸ்டீவ் விஷம் எடுக்கிறார்.

இதுகுறித்து ஸ்டீவ் கூறும்போது, இப்படி பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிக் கொள்வதால் ஒருமுறை நான் இங்கிலாந்தில் தீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்கள் இருக்க வேண்டியதாயிற்று. நான் சாகப்போவதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். வீங்கி கறுப்பாகும் என் கையை வெட்டிவிடப்போவதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இவ்வாறு பாம்பு விஷத்தால் பல்வேறு ஆபத்துகளை சந்தித்துள்ளேன். இது மிகவும் ஆபத்தானது என்றாலும் தவறுகளில் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இப்போது, என்னிடம் நல்ல தொழில்நுட்பம் உள்ளது. நான் பல ஆண்டுகளாக நோய்வாய்ப்படவில்லை என்பதைக் கவனிக்கிறேன். எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக சளி அல்லது காய்ச்சல் வரவில்லை என கூறியுள்ளார்.

மலிவான, பாதுகாப்பான விஷமுறிவு மருந்தை உருவாக்க விரும்பும் ஸ்டீவ் லுட்வினின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புக் கூறுகளை கோபன்ஹேகன் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com