

மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 60). இவர் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவு இவரை மர்மநபர்கள் சிலர் காரில் கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் மேல்மருவத்தூர் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 1-ந்தேதி கடத்தல்காரர்கள் முத்துகுமாரை இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டனர். ரூ.10 லட்சம் கொடுத்து தொழில் அதிபர் முத்துகுமாரை கடத்தல்காரர்களிடம் இருந்து அவரது உறவினர்கள் மீட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை தேடி வந்தனர். மேலும் முத்துகுமாரிடம், கடத்தல்காரர்கள் பற்றிய அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர்.
இந்தநிலையில் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் கூட்டுசாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் மறித்து விசாரித்தனர்.