சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பனியன் நிறுவன தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பனியன் நிறுவன தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 21 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பனியன் நிறுவன தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

திருப்பூர்

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 30). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் திருப்பூர் புதிய பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந்தேதி மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இதுபோல் திருப்பூர் தேவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ்(24). பனியன் நிறுவன தொழிலாளி.

இவர் கடந்த 2016-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அருகில் உள்ள புதரில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இரு வழக்குகளும் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த இரு வழக்குகள் குறித்த விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்தநிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறி னார். இதுபோல் குற்றம் சாட்டப்பட்ட அப்பாசுக்கு 21 வருட சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அப்பாஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com