குன்றத்தூரில், வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ.2¼ லட்சம் கையாடல் - வங்கி ஊழியர் கைது

குன்றத்தூரில் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கையாடல் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
குன்றத்தூரில், வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ.2¼ லட்சம் கையாடல் - வங்கி ஊழியர் கைது
Published on

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த கெலடிப்பேட்டைஅண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் குன்றத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனது மகனின் திருமணத்திற்காக ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்தார். தற்போது தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே வங்கியில் உதவியாளராக வேலை செய்து வந்த பழனிவேல் (வயது 47) அந்த பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை குன்றத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போரூர் உதவி கமிஷனர் சம்பத் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஈஸ்வரியின் வங்கி கணக்கின் ரகசிய எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சிறுக, சிறுக ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை பழனிவேல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் பழனிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்த பணத்தை வங்கி ஊழியரே கையாடல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com