மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அதிகாரி தகவல்

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அதிகாரி தகவல்
Published on

கிருஷ்ணகிரி,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2, டி.இ.ஓ., ஏ.ஏ.ஓ., இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவு துறை, போலீஸ் தேர்வு, ஆர்.ஆர்.பி., ஆகிய போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது.

போட்டி தேர்வுகளுக்கு தயாராக 800-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது. இது தவிர தமிழ், ஆங்கில நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் வரவழைக்கப்படுகின்றன. இங்கு மின்னணு பத்திரிக்கை படிக்கும் வசதியும் உள்ளதால், தங்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம்.

மேலும் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த நூல்களை கொண்டு வந்து, மையத்தில் படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் குரூப்-4, போலீஸ் தேர்வு மற்றும் குரூப்-2 ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். நன்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுவதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com