மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்க விழா

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் ஜமாபந்தி தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்க விழா
Published on

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. இதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இதில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரத்தை சேர்ந்த பதிமடுகு, இனாம்குட்டப்பள்ளி, தீர்த்தம், நாடுவனப்பள்ளி, அளேகுந்தாணி, நேரலகிரி, குரியனப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், மணவாரனப்பள்ளி ஆகிய 9 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.

இதில் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை வழங்கினார்கள். மொத்தம் 250 மனுக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தாசில்தார் மிருணாளினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை வட்டத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. பாவக்கல், மூன்றம்பட்டி, சின்னதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை, நாய்க்கனூர், பெரியதள்ளப்பாடி, கோவிந்தாபுரம், நடுப்பட்டி, எங்கூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்றது. இந்த ஜமாபந்தியை தனித்துணை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.

இந்த ஜமாபந்தி வருகிற 12-ந்தேதி வரை ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் தினமும் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) அத்திப்பாடி, மகனூர்பட்டி, கீழ்மத்தூர், குன்னத்தூர், கே.எட்டிப்பட்டி, நாரலப்பள்ளி, சாமல்பட்டி, ராமகிருஷ்ணம்பதி, கே.பாப்பாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கருமாண்டபதி, கதவணி, காரப்பட்டு, உப்பாரப்பட்டி, கெங்கபிராம்பட்டி, கெரிகேப்பள்ளி, மூங்கிலேரி, புதூர்புங்கனை, கீழ்க்குப்பம் ஊராட்சிகளுக்கு நடக்கிறது. வருகிற 11-ந்தேதி நொச்சிப்பட்டி, மாரம்பட்டி, கொண்டம்பட்டி, ஊத்தங்கரை, காட்டேரி, துரிஞ்சிப்பட்டி, படப்பள்ளி, சாலமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

வருகிற 12-ந்தேதி மேட்டுத்தாங்கல், ஒன்னகரை, வீராட்சிகுப்பம், வீரணக்குப்பம், சந்திரப்பட்டி, ரெட்டிப்பட்டி, ஆனந்தூர், திருவணப்பட்டி, பெரியகொட்டகுளம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது இதில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை சரி செய்து கொள்ளுமாறு தாசில்தார் ஜெய்சங்கர் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com