டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை சரியாக வழங்கப்படவில்லை; எம்.பி.யிடம் கிராம மக்கள் புகார்

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை சரியாக வழங்கப்படவில்லை என்று எம்.பி.யிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை சரியாக வழங்கப்படவில்லை; எம்.பி.யிடம் கிராம மக்கள் புகார்
Published on

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வன்னிவேலாம்பட்டி, பி.சுப்புலா புரம், பி.முத்துலிங்காபுரம், புல்கட்டை, தும்மநாயக்கன்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, சிலைமலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள் 100 நாள் வேலை தங்களுக்கு சரியாக வழங்கப்படவில்லை என்றும் குறைவான நாட்களே வேலை கொடுக்கின்றனர் என்றும், குறைவான நாட்கள் வேலை செய்ததற்குகூட சம்பளம் தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்று கூறினார்கள்.

மேலும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் எம்.பி. யிடம் மனுக்களை கொடுத்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வனிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் மணிமாறன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயராம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானசேகர், பேரையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் குருசாமி மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com