இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜான்பாண்டியன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம்

சென்னை எழும்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜான்பாண்டியன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். .
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜான்பாண்டியன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம்
Published on

சென்னை,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்து இருக்கிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்னை எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அந்த தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார்.

அதற்கான வேட்புமனு தாக்கல் செய்து முடித்த பின் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்...

அஇஅதிமுகவின் வடசென்னை தெற்கு - மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.நா.பாலகங்கா BA., EX. MP., அவர்கள் தலைமையிலும் பகுதி செயலாளர் திரு.மகிழன்பன் MA., EX. MC., அவர்கள் முன்னிலையிலும் (25-03-2021) எழும்பூர் 78வது வார்டு (மேற்கு) பகுதியான மூக்கு செட்டி தெரு, வி. வி.கோவில் தெரு, வெங்கடேசன் தெரு,, சின்னத்தம்பி தெரு, கந்தசாமி கோவில் தெரு, குட்டி செட்டி தெரு, அருணாச்சலம் தெரு, வெள்ள பங்காரு தெரு, ஏரன் தெரு, புது மாணிக்கம் தெரு, ஏமி தெரு, வடமலை தெரு, வெங்கடாசலம் தெரு, முக்காதால் தெரு, கந்தப்ப தெரு, முருகப்ப தெரு, தானா தெருவில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்..

பின்னர் ஒவ்வொரு தெருவிலும் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து, பூக்களைத் தூவியும் ,உற்சாக வரவேற்பு அளித்தனர்....

ஏழைகளின் சிம்ம சொப்பனமாய் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்....

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com