

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 3 ஆயிரத்து 807 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2828 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 230 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சென்னை, கோவை, திருச்சி, சேலம் தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கள்ளக்குறிச்சி நகராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 106 தெருக்கள், திருக்கோவிலூர், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், வடக்கனந்தல், சங்கராபுரம் ஆகிய 6 பேரூராட்சிகள் மற்றும் 15 கிராமங்கள் அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் யாருக்கும் காய்ச்சல், சளி, இருமல்,ரத்த அழுத்தம் உள்ளதா என சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.