கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்ககான மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான 25 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 430 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் 8189892380 என்ற செல் போனுக்கு தகவல் தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, அய்யம்பெருமாள், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அய்யாக்கண்ணு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க இயக்குநர் சேகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com