கோலார் தங்கவயலில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னம் - தொல்லியல் துறையினர் கண்டுபிடித்ததாக சமூக ஆர்வலர் தகவல்

கோலார் தங்கவயலில், கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்ததாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.
கோலார் தங்கவயலில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னம் - தொல்லியல் துறையினர் கண்டுபிடித்ததாக சமூக ஆர்வலர் தகவல்
Published on

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் அருகே உள்ள அடம்பள்ளி கிராமத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி அப்போதைய மைசூரு மாநில தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்த ஆராய்ச்சியின் போது அடம்பள்ளி கிராமத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான படங்களும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான ரமேஷ் லோகநாதன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வரலாற்றுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களாக நினைவு சின்னங்களை உலகின் சில நாடுகளில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களை புதைப்பதற்காகவும், ஒன்று கூடி கடவுள் வழிபாடு செய்யவும் கற்கால மனிதர்கள் குத்து கற்களை கொண்டு குகை வடிவில் அடுக்கியுள்ளனர். இதை உலக நாடுகள் புராதன சின்னங்களாக பாதுகாத்து வருகின்றன.

இந்தியாவில் கோலார் தங்கவயல் அருகே அடம்பள்ளி கிராமத்திலும் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னங்களை அப்போதைய மைசூரு மாநில தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். அந்த நினைவு சின்னங்களில் கற்காலிக மனிதர்கள் இறந்தவர்களை எரியூட்டவும் அல்லது புதைக்கவும், ஒன்று கூடி வழிபாடு நடத்துவதும் இடம்பெற்று உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com