கொள்ளிடம் ஆற்றில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி

லால்குடி பகுதி விவசாயிகளின் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி.
கொள்ளிடம் ஆற்றில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி
Published on

லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடி வடக்கு ஒன்றியம் அப்பாத்துரை, எசனைக்கோரை, தண்டாங்கோரை, திருமணமேடு, பச்சாம்பேட்டை, பம்பரம்சுற்றி, இடையாற்றுமங்கலம், கூகூர், சாத்தமங்கலம், ஆனந்திமேடு ஆகிய பகுதிகளில் லால்குடி சட்டமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து வேட்பாளர் தர்மராஜ் பேசுகையில், நான் நகர் கிராமத்தை சேர்ந்தவன் லால்குடி பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றில் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்ட முயற்சி மேற்கொள்வேன். அ.தி.மு.க. 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். லால்குடியில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது ஒன்றிய செயலாளர்கள் லால்குடி தெற்கு சூப்பர் நடேசன், புள்ளம்பாடி தெற்கு சிவகுமார், நகர செயலாளர்கள் லால்குடி சந்திரசேகர், பூவாளூர் ஜெயசீலன், கல்லக்குடி பிச்சைபிள்ளை, புள்ளம்பாடி ஜேக்கப் அருள்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.பாலன், மாவட்ட பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, லால்குடி அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குணசீலன், தாமஸ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் நன்னிமங்கலம் சக்திவேல் உள்பட அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com