கும்மிடிப்பூண்டி தாலுகாவில் குறை தீர் முகாம்

தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு அதற்கான தீர்வை ஒரு மாத காலத்திற்குள் காண அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் குறை தீர் முகாம்
Published on

கும்மிடிப்பூண்டி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு அதற்கான தீர்வை ஒரு மாத காலத்திற்குள் காண அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் சிறப்பு குறை தீர் முகாம் தாசில்தார் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமலூர் கிராமத்தில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை பெற்று கொண்டார்.

அப்போது அவருடன் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் சுரேஷ்பாபு ஆகியோர் உடன் இருந்தார். வருகிற 29-ந்தேதி வரை பல்வேறு கிராம மக்களிடம் இருந்து மனுக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பெற உள்ளனர். மேற்கண்ட மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனுக்குடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com