மன்னார்குடி பகுதியில் தொடரும் மழையால் அழுகும் நெற்பயிர்கள் வயல்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் துயரம்

மன்னார்குடி பகுதியில் தொடரும் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன.. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் விவசாயிகள் துயரத்தில் உள்ளனர்.
மன்னார்குடி பகுதியில் தொடரும் மழையால் அழுகும் நெற்பயிர்கள் வயல்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் துயரம்
Published on

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகியும், முளைக்கவும் தொடங்கி விட்டன.

மழை தொடர்ந்து பெய்வதால் வயல்களில் தேங்கிய நீர் வடிய வாய்ப்பில்லாமல் நெற்பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் துயரத்தில் உள்ளனர்.

கூடுதல் நிவாரணம்

இந்த ஆண்டு பருவம் தாண்டி மார்கழி, தை மாதங்களில் நீடிக்கும் தொடர் மழையால் விவசாயிகள் 100 சதவீத இழப்பை சந்தித்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில் அதை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். கூடுதல் செலவு செய்து இயற்கை முறையில் விவசாயம் செய்துள்ளவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com