நாசிக் சந்தைகளில் வெங்காயம் ஏலம் விடும் பணி தொடங்கியது - உத்தவ் தாக்கரே வாக்குறுதியை வியாபாரிகள் ஏற்றனர்

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாக்குறுதியை ஏற்று நாசிக் வியாபாரிகள் வெங்காயம் ஏலம் விடும் பணியை நேற்று தொடங்கினர்.
நாசிக் சந்தைகளில் வெங்காயம் ஏலம் விடும் பணி தொடங்கியது - உத்தவ் தாக்கரே வாக்குறுதியை வியாபாரிகள் ஏற்றனர்
Published on

மும்பை,

மராட்டியம், கர்நாடகாவில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயம் வரத்து குறைந்து அதன் விலை கிடு, கிடுவென அதிகரித்து உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காயத்தை இருப்பு வைக்க கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இதன்படி சில்லரை வியாபாரிகள் 2 டன் வரையிலும், மொத்த வியாபாரிகள் 25 டன் வரை மட்டுமே வெங்காயத்தை இருப்பு வைக்க முடியும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் சந்தைகளில் வெங்காய ஏலத்தை கடந்த 3 நாட்களாக வியாபாரிகள் நிறுத்தி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் வெங்காய வியாபாரிகள் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அப்போது வியாபாரிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளை முதல்-மந்திரியிடம் விளக்கி கூறினர். இந்த சந்திப்பின்போது வெங்காய வியாபாரிகள் பிரச்சினை குறித்து மத்திய அரசை வலியுறுத்த இருப்பதாகவும், எனவே வியாபாரிகள் ஏலம் விடும் பணியை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று நேற்று நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்படி நேற்று லசல்காவ் வெங்காய சந்தை உள்பட நாசிக் மாவட்டத்தில் உள்ள 15 ஏ.பி.எம்.சி. சந்தைகளிலும் வெங்காயம் ஏலம் விடும் பணி தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com