மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. போதிய குப்பை தொட்டிகள் இல்லாமல் உள்ளதால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மாத்தூர் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

நீர் நிலைகள் உள்ள இந்த ஏரிக்கு செல்லும் வழியிலேயே குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என்று பிரிப்பதில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நிலையே ஊராட்சியில் உள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழை நீருடன் குப்பைகள் கலந்து நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் கலக்கும் நிலை உள்ளது.

முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிக்கு செல்லும் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் சாலை ஓரங்களில் அதிகப்படியான குப்பை தொட்டிகளை அமைத்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com