மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கிகள் பதுக்கப்பட்டுள்ளதா? - போலீசார் தீவிர சோதனை

மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கிகள் பதுக்கப்பட்டுள்ளதா? - போலீசார் தீவிர சோதனை
Published on

திண்டுக்கல்,

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி மாவட்டம் முழுவதும் உரிமத்துடன் வைக்கப்பட்டிருந்த 1,034 துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் அவற்றின் உரிமையாளர்கள் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் உரிமம் பெறாமல் கள்ளத்துப்பாக்கிகளை யாரேனும் வைத்துள்ளார்களா? என விசாரணை நடத்தும்படியும், ஒருவேளை யாரேனும் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் அதனை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்படி உரிமம் இல்லாமல் யாரேனும் கள்ளத்துப்பாக்கிகளை வைத்துள்ளார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிப்பவர்கள் யாரேனும் கள்ளத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தற்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் வனப்பகுதியில் சந்தேகப்படும்படி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் யாரேனும் நடமாடினால் உடனடியாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மலைக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அங்கு பதுங்கி இருக்கிறார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com