போலீஸ் குடியிருப்பில் போலீசாருக்கு மலிவுவிலை பல்பொருள் அங்காடி

சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் போலீசாருக்கு மலிவுவிலை பல்பொருள் அங்காடி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
போலீஸ் குடியிருப்பில் போலீசாருக்கு மலிவுவிலை பல்பொருள் அங்காடி
Published on

சென்னை,

சென்னையில் பணியாற்றும் போலீசாருக்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் வகையில் போலீசார் குடியிருப்பு பகுதியில் மலிவு விலை பொருட்கள் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் மலிவுவிலை பல்பொருள் அங்காடி கட்டப்பட்டது. அதனை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மலிவுவிலை அங்காடியில் 10 முதல் 30 சதவீதம் விலை குறைவாக இருக்கும். வடசென்னையில் வசிக்கும் போலீசார் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு உதவியாக இருந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு சென்னை போலீஸ்துறை சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

அப்போது அவரிடம் நடிகர் எஸ்.வி.சேகர் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் சேஷசாயி, இணை கமிஷனர் சுதாகர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com