ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தலைமை செயலாளர் ஆய்வு: கூடுதல் கிடங்கு வசதிகள் செய்துதர - விவசாயிகள் கோரிக்கை

புதுவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் கூடுதல் கிடங்கு வசதிகள் செய்துதர விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தலைமை செயலாளர் ஆய்வு: கூடுதல் கிடங்கு வசதிகள் செய்துதர - விவசாயிகள் கோரிக்கை
Published on

புதுச்சேரி,
புதுவை தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதி விவசாயிகள் நெல், மணிலா, பயிறு வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்ற னர். இங்கு விவசாயிகள் விற்பனை செய்யும் விளைபொருட்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் இடைத்தரகர்கள் ஏதுமின்றி விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு விற்பனைக்கு வரும் விளைபொருட்கள், அதன் அளவு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை வாங்கி பார்வையிட்டார்.

மேலும் விவசாயிகளிடம் அவர் கருத்து கேட்டார். அப்போது அவரிடம் விவசாயிகள், தங்குமிடம், குடிநீர் வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதுமட்டுமின்றி மழை, வெயில் காலங்களில் விளைபொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு ஆவன செய்வதாக தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரும் உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com