

காரைக்காலை,
காரைக்காலை அடுத்த நெடுங்காடு அண்டூர் கிராமத்தில் உள்ள, நண்டலாறு ஆற்றுப்பகுதியில் சிலர் இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரத்தின் மூலம் சிலர் 6 டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே அதிகாரிகளை கண்டதும், மர்மநபர்கள் தங்களது டிராக்டர்கள், பொக்லைன் எந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து 6 டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் வாகனங்களின் எண்ணை வைத்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.