ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லையில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கும் பணிகள் மும்முரம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பகுதியில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லையில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கும் பணிகள் மும்முரம்
Published on

நெல்லை,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை மாநகராட்சி சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டிட பணிகள், அபிவிருத்தி பணிகள் நடக்கின்றன. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வணிக வளாகத்துடன் புதிதாக கட்டப்படுகிறது. மார்க்கெட்டுகள் வணிக வளாகங்களாக மாற்றப்படுகின்றன. குடிநீர் திட்டங்கள், புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் புதிதாக கட்டப்படுகிறது. இதற்காக பஸ்நிலையம் மூடப்பட்டு கடைகள் இடிக்கப்பட்டது. தற்போது புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் அந்த இடத்தில் உள்ள 500 கிலோ வாட் திறன் கொண்ட 2 டிரான்ஸ்பார்மர்களும், பஸ்நிலையத்திற்கு எதிர்புறம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இந்த டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள், மின்வாரிய உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அதன்படி மின்சார வாரிய ஊழியர்கள், பொக்லைன் எந்திரத்தின் மூலம் பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவையான வசதிகளையும் செய்து வருகிறார்கள்.

நேற்று பொக்லைன் எந்திரத்தின் மூலம் புதிய மின்கம்பங்கள் நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தநிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இருந்தாலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com