

நாகர்கோவில்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 133 அரசு பள்ளிகள், 135 அரசு உதவி பெறும் பள்ளிகள், 154 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 422 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 25,271 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமரி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 12,265 பேரும், தேர்வு எழுதிய மாணவிகளில் 12,544 பேரும் ஆக மொத்தம் 24,809 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் 2-வது இடம்
குமரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 98.17 ஆகும். எனவே தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் குமரி மாவட்டம் 2-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 97.19; மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 99.15 ஆகும். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் மாணவர்களைவிட, மாணவிகள் 279 பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி மாவட்டம் வாரியாக
கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2,039 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2,959 பேரும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3,245 பேரும் ஆக மொத்தம் 8,243 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,980 மாணவ-மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2,854 மாணவ-மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 3,209 மாணவ-மாணவிகளும் ஆக மொத்தம் 8,043 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 97.57 ஆகும்.
தக்கலை
தக்கலை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 1,706 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 4,545 பேரும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2,803 பேரும் ஆக மொத்தம் 9,054 பேர் தேர்வு எழுதினர்.
இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,669 மாணவ-மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4,458 மாணவ-மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 2,786 மாணவ-மாணவிகளும் ஆக மொத்தம் 8,913 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 98.44 ஆகும்.
குழித்துறை
குழித்துறை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 1,436 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3,557 பேரும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 2,981 பேரும் ஆக மொத்தம் 7,974 பேர் தேர்வு எழுதினர்.
இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,414 மாணவ-மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3,472 மாணவ-மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 2,967 மாணவ-மாணவிகளும் ஆக மொத்தம் 7,853 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 98.48 சதவீதம் ஆகும்.
தேர்வு முடிவுகள் நேற்று அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டு இருந்தது. அதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். ஏராளமான மாணவ-மாணவிகள் செல்போன்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.