தாளவாடி அருகே கொளுத்தும் கோடையில் குடிநீர் இன்றி அவதிப்படும் மலைவாழ் மக்கள்

தாளவாடி அருகே கொளுத்தும் கோடை வெயிலில், குடிநீர் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
தாளவாடி அருகே கொளுத்தும் கோடையில் குடிநீர் இன்றி அவதிப்படும் மலைவாழ் மக்கள்
Published on

தாளவாடி,

தாளவாடி அடுத்த இக்களூர் ஊராட்சிக்கு உட்பட்டது பாலப்படுகை மலை கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள். இதுதவிர ஆடு, மாடு வளர்த்து வருகிறார்கள்.

பாலப்படுகை மக்களின் குடிநீர் தேவைக்காக இக்களூர் ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் அமைத்து அதில் இருந்து தண்ணீர் உறிஞ்சி குழாய் வழியாக வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குழாயில் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை.

இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்கள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் கொளுத்தும் கோடை வெயிலில் குடிக்க தண்ணீர் வேண்டுமே.

அதனால் குடங்களை எடுத்துக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, பக்கத்து கிராமங்களில் உள்ள தோட்டத்து கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பாலப்படுகை மலைவாழ் மக்கள் கூறும்போது, ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் தண்ணீர் வினியோகித்து வந்தார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து கேட்டால் மின்மோட்டார் பழுதாகி விட்டது என்கிறார்கள். அதை உடனே சரிசெய்யவும் இல்லை. அதனால் கூலிவேலைக்கு கூட போகாமல் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தண்ணீர் எடுக்க செல்கிறோம். நெருப்பாய் சுடும் வெயிலில் தண்ணீர் எடுத்து வருவதற்குள் களைப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே எங்களின் சிரமத்தை போக்க பாலப்படுகை ஊராட்சி நிர்வாகம் உடனே ஆழ்குழாய் மோட்டாரை சரிசெய்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என்றார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com