கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் கண்மாய் மராமத்து பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு

கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் கண்மாய் மராமத்து பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

முதுகுளத்தூர்,

நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையிலும், மழைநீரை வீணாக்காமல் சேமிக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப்பணிகளின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்களின் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊருணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்க பணிகள் திட்டத்தின்கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சிறுபாசன கண்மாய்க்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலும், ஊருணிகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ரூ.21.8 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடலாடி தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கீழ் சிக்கல் கண்மாயில் ரூ.69.10 லட்சம் மதிப்பிலும், மாராந்தை கண்மாயில் ரூ.69 லட்சம் மதிப்பிலும், முதுகுளத்தூர் தாலுகா மேலப்பனையூர் கண்மாயில் ரூ.37 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறையின்கீழ் கடலாடி யூனியனுக்கு உட்பட்ட பழங்குளம் ஊராட்சியில் சடையனேரி ஊருணியிலும், இளஞ்செம்பூர் மடத்து ஊருணியிலும், சிக்கல் கண்மாயிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி பொறியாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தக்கண்ணன், மேகலா, தாசில்தார்கள் கல்யாணகுமார், முத்துக் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com