கவுண்டர்பாளையம் கிராமத்தில் குடியிருப்புகளின் மேல் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கவுண்டர்பாளையம் கிராமத்தில் குடியிருப்புகளின் மேல் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவுண்டர்பாளையம் கிராமத்தில் குடியிருப்புகளின் மேல் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சியில் அடங்கியது கவுண்டர்பாளையம் கிராமம். இங்கு அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொதுவினியோக அலுவலகம் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளின் மேல் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்ற கோரி மின் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கிராம பொதுமக்கள் உயிர் அழுத்த மின் கம்பியை மாற்ற கோரி தமிழக முதல்-அமைச்சர் மின்வாரிய உயர் அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி நடவடிக்கை எடுக்க அனுப்பிய கடிதத்தின் மீது மின்வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளரின் ஆலோசனையின்படி வளர்ச்சி மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பி உள்ளதாகவும் மீஞ்சூர் அடுத்த மேலூர் இயக்குதல் பராமரித்தல் மின்வாரிய உதவி பொறியாளர், தமிழக முதல்வர், உயர் அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோருக்கு புகார் மனுவுக்கு பதில் கடிதம் எழுதி ஓராண்டுக்கும் மேல் ஆகியுள்ளது.

இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் குடியிருப்புகளின் மேல் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com