டொம்புச்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

டொம்புச்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
டொம்புச்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
Published on

உப்புக்கோட்டை,

போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட டொம்புச்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் அங்கன்வாடி, சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பொதுமக்களிடம் இருந்து 160 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் 76 பேருக்கு வீட்டுமனை பட்டா, 14 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், 6 பேருக்கு குடும்ப அட்டை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மருந்து தெளிக்கும் எந்திரம், தார்பாய், உரம், பூச்சிக்கொல்லி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முகாமில் தொழில் தொடங்குவதற்கு படித்த, படிக்காத இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வங்கிகள் மூலம் கடன் வழங்குதல், தனிநபர் கழிப்பறை அமைத்தல், பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தகோருதல், டெங்கு காய்ச்சல் பரவாத வண்ணம் வீடுகளில் கழிவுநீர் தேங்காதவாறு சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துகொள்ளுதல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் சப்-கலெக்டர் வைத்திநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார், தாசில்தார் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதமணி, சாந்தி, ஊராட்சி செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அதிகாரி மணிமேகலை செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com