

படப்பை,
முகாமிற்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமணி, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.பழனி கலந்து கொண்டார். மனுநீதி நாள் முகாமில் 116 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து ஆயிரத்து ஐநூறு மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாமில் காட்ரம்பாக்கம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஜானகிராமன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை, புதிய ரேஷன்கார்டு, வேலைவாய்ப்புத் துறை, இலவச வீட்டு மனை, ரேஷன்கார்டில் பெயர் திருத்தம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. முகாமில் மருத்துவத்துறை, வேளாண் துறை, தோட்டக்கலை ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.