திருச்சுழி ஒன்றியத்தில் தொழில்பேட்டை அமைக்க பாடுபடுவேன் - அதிமுக வேட்பாளர் ராஜசேகர்

திருச்சுழி தொகுதியில் தொழில் வளர்ச்சிக்காக தொழில் பேட்டை அமைக்க பாடுபடுவேன் என்று அதிமுக வேட்பாளர் ராஜசேகர் பேசினார்.
திருச்சுழி ஒன்றியத்தில் தொழில்பேட்டை அமைக்க பாடுபடுவேன் - அதிமுக வேட்பாளர் ராஜசேகர்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக எஸ் ராஜசேகர் போட்டியிடுகிறார் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வாக்காளர் சந்தித்து ஆதரவு திரட்டினார். வேட்பாளர் ராஜசேகர் திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த எர்ரம்பட்டி, புதுப்பட்டி ,பண்ணை மூன்ற டைப்பு, தொட்டியங்குளம் ,கிருஷ்ணாபுரம்,புலிக்குறிச்சி, கிழகண்டமங்கலம், மேலகண்டமங்கலம், சித்தலக் குண்டு, கரிசல்குளம் ,பொம்ம கோட்டை , குலசேகரநல்லூர், தமிழ்பாடி, ஒத்தவீடு, சாமிநத்தம் , ராமசாமிபட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு ஆதரவு திரட்டினார் அப்போது வேட்பாளர் ராஜசேகர் பேசும்போது. மாவட்டத் திலேயே திருச்சுழி தொகுதி மிகவும் பின்தங்கிய தொகு தியாக பகுதியாக இருக்கிறது. அன்றாடம் கூலி வேலை செய்பவர்களும் நெசவாளர் களும் அதிகமாக உள்ளனர் . திருச்சுழி தொகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கும் கல்வி விவசாய முன்னேற் றத்திற்கு பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிச்சயமாக செயல்படுத்தப்படும் .

தொழில் முனைவோர்களுக்காகவும் இப்பகுதியில் வேலை வாய்ப்புக்காக தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கிராமப்புற ஏழை விவசாயி களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வரும் திருச்சுழி ஒன்றியத்தை பொருத்தவரை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தார்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்து வேன் திருச்சுழி அரசு மருத்துவ மனையில் 24 மணி நேரம் விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஒன்றிய செயல ளர்கள் முத்துராமலிங்கம் முனியாண்டி மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com