திருவாரூரில், அனுமதி இல்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த குடிநீர் ஆலைக்கு “சீல்” வைப்பு

திருவாரூரில், அனுமதி இல்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.
திருவாரூரில், அனுமதி இல்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த குடிநீர் ஆலைக்கு “சீல்” வைப்பு
Published on

திருவாரூர்,

திருவாரூர் துர்க்காலயா ரோட்டின் அருகில் உள்ள நல்லப்பா நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு தனியார் குடிநீர் ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை உரிய கட்டிட அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆலையால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிக அளவு குறைந்து விட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் குடிநீர் ஆலையை மூட வலியுறுத்தி நகர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து குடிநீர் ஆலை செயல்பட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சென்னை ஐகோர்ட்டில் குடிநீர் ஆலையை மூட வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

சீல் வைப்பு

இதனை தொடர்ந்து நகர ஊரமைப்பு துணை இயக்குனர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில், மேலாளர் முத்துக்குமார், நகரமைப்பு ஆய்வாளர் நேதாஜிமோகன் ஆகியோர் உரிய கட்டிட அனுமதி இல்லாமல் இயங்கி வந்த தனியார் குடிநீர் ஆலைக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com