திருவாரூரில் போதை பொருள் விற்பனையை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூரில் போதை பொருள் விற்பனையை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருவாரூரில் போதை பொருள் விற்பனையை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் பதிவு பெற்று இயங்கி வரும் 10 குழந்தைகள் இல்லங்களிலும் உள்ள குழந்தைகளுக்கான தனி நபர் பராமரிப்பு படிவங்களில் குழந்தைகள் ஒவ்வொருவரின் தனித்தன்மைகளும் ஆற்றுப்படுத்துனரை கொண்டு முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். திருவாரூரில் போதை பொருட்கள் விற்பனையினை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என கூறினார்.

மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி கூறுகையில், வட்டார மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு உரிய கால இடைவெளியில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கர், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com