தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

86 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மற்றும் பணம் வைத்து சூதாடியவர்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நேற்று முன்தினம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 11 வழக்குகளும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 12 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்து 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மது விற்பனை

இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரும், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 29 பேரும், சூதாட்டம் ஆடியவர்கள் 20 பேரும், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்குகளில் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 179 மதுபாட்டில்கள், 1775 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.7 ஆயிரத்து 300 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இதுவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 174 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com