

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள எப்போதும்வென்றானை சேர்ந்தவர் சந்தனராஜ் (வயது 24). இவர் தபால் மூலம் எம்.பி.ஏ. படித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது தாய் விஷம் குடித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தூத்துக்குடிக்கு வந்த சந்தனராஜ், தாயை பார்த்து விட்டு வந்த போது, மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம்.
பின்னர் தூத்துக்குடி 4-வது ரெயில்வே கேட் அருகே உள்ள சின்னகண்ணுபுரத்துக்கு சென்று உள்ளார். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.