திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி மீண்டும் வெற்றி 28,240 வாக்கு வித்தியாசத்தில் வாகை சூடினார்

திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் நல்லதம்பி 28,240 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி மீண்டும் வெற்றி 28,240 வாக்கு வித்தியாசத்தில் வாகை சூடினார்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பாக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிட்டார். அ.தி.மு.க.கூட்டணி சார்பில் பா.ம.க.வேட்பாளர் டி.கே.ராஜா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஏ.ஞானசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.சுமதி ஆகியார் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டன. முதல் இரண்டு மூன்று சுற்றுகளில் பா.ம.க.வேட்பாளர் டி.கே.ராஜா முன்னிலையில் இருந்தார். அதன்பின் அனைத்து சுற்றுகளிலும் தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை விட 28,240 வாக்குகள் வித்தியாசத்தில் நல்லதம்பி அமோக வெற்றி பெற்றார்.

வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள்- 2,38,544

பதிவானவை-1,83,610

ஏ.நல்லதம்பி (தி.மு.க.)-96,522

டி.கே.ராஜா (பா.ம.க.) -68,282

எம்.சுமதி (நாம் தமிழர் கட்சி) -12,127

ஞானசேகர் (அ.ம.மு.க.) -2,702

விஜயகுமார் (சுயே) -1,096

காளஸ்திரி (அகில இந்திய உழைப்பாளர் உழவர் உழைப்பாளர் கட்சி) -724

சத்தியமூர்த்தி (மக்கள் நல கழகம்) -519

ஆரோக்கிய ஜோ பிரபு (சுயே) -438

பழனி (சுயே) -362

நல்லசிவம் (சுயே) -323

மனிதன் (சுயே) -309

கோவிந்தராஜ் (சுயே) -297

ரோசலின் ஜிவா (சாமானிய மக்கள் கட்சி) -264

ராஜா (சுயே) -205

ஜெயமா (அனைத்து மக்கள் புரட்சி கட்சி) -128

நோட்டா-1632.

செல்லாதவை-583.

2-வது முற வெற்றி

இதன் மூலம் நல்லதம்பி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனாகார்க், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com