திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் அடித்து கொலை - 2 பேர் கைது

திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் அடித்து கொலை - 2 பேர் கைது
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பாக்கிய அன்பரசன் (வயது 44) . பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பருதி (26) மற்றும் காலேஜ் ரோட்டில் வசித்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (30) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மாலை பாக்கிய அன்பரசன் வெங்கமேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது இளம்பருதி, ஆனந்த் இருவரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளம்பருதி, ஆனந்த் ஆகியோர் சேர்ந்து பாக்கிய அன்பரசனை கல்லால் தலை மற்றும் முகத்தில் பயங்கரமாக தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்து, உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாக்கிய அன்பரசனின் மனைவி சாக்லன் மேரி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து இளம்பருதி, ஆனந்த் இருவரையும் கைது செய்தார்.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாக்கிய அன்பரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com