திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் - கல்வி அதிகாரி தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் - கல்வி அதிகாரி தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மழலையர், நர்சரி,மெட்ரிக் பள்ளிகள் மற்றும் பிற வாரியத்தில் இணைப்பு பெற்ற பள்ளிகளில் சென்னை ஐகோர்ட்டு ஆணையை மீறி 2020-2021-ம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பான புகார்களை matriccomplaintceotlr@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். சென்னை ஐகோர்ட்டு ஆணையை மீறி மாணவர்களிடம் 100 சதவீதம் கல்வி கட்டணம் செலுத்த கோரி எந்த விதமான நிர்ப்பந்தமும் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com