

திருவள்ளூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உருவெடுத்து தினந்தோறும் நோய் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்தும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 1,560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 66 ஆயிரத்து 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 58 ஆயிரத்து 838 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
6 ஆயிரத்து 958 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 848 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 12 பேர் இறந்துள்ளனர்.