

வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 54). இவர் நேற்று முன்தினம் மதியம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 28 பவுன் தங்க நகைகளை மீட்டார். அந்த நகைகளை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைத்தார். பின்னர் ஊரப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பெட்ரோல் போட்டார்.